Monday, 16 October 2023

என்னைப் பற்றி









ரவிக்குமார்

திருப்பூர் மாவட்டம் 
ஊத்துக்குளி ஆர் எஸ்
அருகே பல்லவராயன் பாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தேன்.

திருப்பூர் பனியன் தொழிலாளியாக பணியில் சேர்ந்து கடின உழைப்பால் ஜாப் ஒர்க் கம்பெனியை தொடங்கினேன். அதில் இருந்து வளர்ந்து சொந்தமாக ஆடை தயாரிப்பும் செய்து வந்தேன்.
நல்ல முன்னேற்றம் அடைந்து வரும் போது
திடீரென எல்லாம் மாறியது.

சம்பாதித்த காசுக்கு மேல் கடன்.என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏன் இந்த நிலமை என்று ஆராய்ந்த போது
சம்பாதிக்கவும் உழைக்கவும் தெரிந்த எனக்கு பொருளாதாரம் குறித்து முறையாக வழிகாட்ட ஆள்  இல்லை.பொருளாதாரம் குறித்து  தீவிரமான தேடலை தொடங்கினேன்.

அப்படி தேடும் போது தான்
இண்சூரன்ஸ் பயன்பாடுகளை அறிந்தேன்.(சிறிய தொகையால், பெரிய பலன்)ஒருவர் கடன் மற்றும் விபத்து , மருத்துவம் போன்ற பொருளாதார இழப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார். இறப்பு ஏற்ப்பட்டால் மனைவி, குழந்தைகள் பொருளாதார அவலநிலையில் இருந்தும் மற்றும் சமூகத்தில் இருந்தும் பொருளாதார ரீதியாக பாதுக்கப்படுவதை  உணர்ந்தேன். 

அப்படி சேமிக்க என்ன வழி என்று தேடும் போதுதான் அரசாங்க நிறுவனமான LICயை தேர்வு செய்தேன்.
ஒரு பக்கம் பணத்துக்கு க்யாரண்டி. இன்னொரு பக்கம் அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு,
இந்த விஷயம் மிகவும் அற்புதமாக இருந்தது .

அன்று முதல் ஏஜணெட்டாக சேர்ந்து இன்று நேரடி ஆலோசகர் என்ற நிலையை அடைந்தேன்.
அதற்கு அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள சிறந்த மற்ற இண்சூரன்ஸ் தொழில் முறை வல்லுனர்களுடன் கூட்டு சேர்ந்து மற்ற காப்பீடுகளையும் வழங்க ஆரம்பித்தேன்.

வெளிநாடுகளில் வசிப்போருக்கும்NRI , இந்தியா முழுவதும் இருப்போருக்கும்
எனது சேவையை டிஜிட்டல் முறையில் ஆன்லைனிலும், நேரடியாகவும் வழங்கி வருகிறேன்.
எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில்
கூலி தொழிலாளியாகவும், நிறுவனத்தின் முதலாளியாகவும், கடனாளியாகவும், கடன் கொடுத்து ஏமாந்தவனாகவும், கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்தவனாகவும், முதலீட்டாளர்கள் இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒர் மாறுபட்ட பொருளாதார பார்வையை உணர்ந்தேன்.

தொழில்முறை அனுபவங்களாக
Angel One, profit Mart, Motilal Oswal ல் sub-broker ஆகவும், கிரிடிட் கார்டு விற்பனை பிரதிநிதி, Corporate நிறுவனத்தில் point of sales personஆக அனைத்து வகையாகன life insurance மற்றும் health insurance பாலிசிளையும்  விற்று வேலை செய்த பணி அனுபவம் உள்ளது.

வாழ்க்கை அனுபவம்+ தொழில் முறை அறிவுடன் எளிமையான முறையில் சிறப்பாக பணி செய்து வருகிறேன்.

இந்த வெற்றிக்கு முதல் காரணமான எனது நட்புகளுக்கும் உறவுகளுக்கும், இணைய வழி நண்பர்களுக்கும்,
 மிகவும் பெருமையுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு சேவை வழங்க வாய்ப்பளித்தமைக்கு உங்களும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் 


நன்றிகள்

வாழ்க வளமுடன்.....

Ravikumar
(Insurance And Investment Advisor)

IRDIA and SEBI, AMFI authorised person.

9952363508










1 comment:

என்னைப் பற்றி

ரவிக்குமார் திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி ஆர் எஸ் அருகே பல்லவராயன் பாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். திருப்பூர் பனியன் தொழிலாளியாக ப...